பணத்தை கொட்டி கொடுக்கும் லட்சுமி நாராயண யோகம் - ஜாக்பட் எந்த ராசிகளுக்கு?
துலாம் ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாவதால் அது பல ராசிகளுக்கு வசதியை ஏற்படத்தி செல்வத்தை குவிக்கப்போகிறது எனப்படுகின்றது.

லட்சுமி நாராயண யோகம்
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிகளின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தான் செய்யும்.
இதனால் செல்வம், முன்னேற்றம், அதிர்ஷ்டம் போன்ற நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

2026 செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன் செப்டம்பர் 2ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைகிறார். அதன்பின் புதன் செப்டம்பர் 26ஆம் தேதி அதே துலாம் ராசியில் சேருகிறார்.
இந்த இரு கிரகங்களின் இணைப்பால் “லட்சுமி நாராயண யோகம்” உருவாகிறது.
ஜோதிடத்தில் இது ஒரு சுப யோகம் எனப்படுகின்றது.
இந்த யோகத்தின் தாக்கம் சுமார் 30 நாட்கள் வரை இருக்கும். அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை காண்பார்கள் என்பதை பார்க்கலாம்.

துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமான பலன்களை தரும். இதுவரை பணநெருக்கடி குறையும். வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். அலுவலகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் . தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வருமான வழிகள் கிடைக்கும். குடும்ப மற்றும் தாம்பத்ய வாழ்க்கையில் அமைதி இருக்கும்.
விருச்சிகம்
- லட்சுமி நாராயண யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வெற்றிகளைத் தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்கலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வருமானம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் குறையும்.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமான வளர்ச்சியைத் தரும். தொழிலில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த பணம் கிடைககும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீண்ட கால பிரச்சனை முடிவிற்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். தொழில் மற்றும் அலுவலக சூழ்நிலையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும்.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த லட்சுமி நாராயண யோகம் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை அதிகரிக்கும். திடீர் பணவரவு அல்லது நிதி ஆதாயம் ஏற்படலாம். வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).