புது வருட துவக்கத்தில் வரவிருக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம்; ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்கள்
பொதுவாக ராசிகளுக்கான பலன்கள் கிரக மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.
இவ்வாறு மாறும் கிரக இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நவகிரங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒவ்வொரு ராசிகளாக மாறுகின்றன. இதன்போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன.
அந்த வகையில் இன்னும் சில தினங்களில் நாம் புது வருடத்தில் உள்நுழைய இருக்கிறோம். இந்த ஆண்டு சிலருக்கு நினைத்து பார்க்க முடியாத யோகத்தை தரும்.
முக்கியமாக செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் புதனில் பயணிக்கவுள்ளார். இதனால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தில் பலன் பெறப் போகும் குறிப்பிட்ட 3 ராசிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
லட்சுமி நாராயண ராஜயோகம்
1. தனுசு
லட்சுமி நாராயண ராஜயோகத்தால் தனுசு ராசிக்கு மங்களம் உண்டாகும். ரொம்ப நாள் இருக்கும் பண கஷ்டம் இல்லாமல் போகும், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். சுயமதிப்பு, ஆளுமை, மரியாதை அதிகமாக கிடைக்கும். தனுசு ராசியினரின் நீண்ட ஆசை நிறைவேறும் இதனால் பணம், பதவி உயர்வு கிடைக்கும்.
2. மேஷம்
மேஷ ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் முக்கிய பலன்கள் நிறைவேறும். முக்கியமாக தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
தொழில் ரீதியாக முன்னேற நினைப்பவர்கள் தாராளமாக அடுத்த வருடம் முயற்சிக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகன் - தந்தை உறவு மேம்பட வாய்ப்பு இருக்கின்றது.
3. துலாம்
இந்த ராசிக்காரர்கள் அடுத்த வருடம் ஜாக்போட் தான். பணிபுரிபவர்கள் சிலர் பதவி உயர்வைப் பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தை புத்தாண்டின் தொடக்கத்தில் பெற வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தை விடயத்தில் நற்செய்தி கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |