அடுத்தடுத்து கிடைத்த தோல்வியால் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியான லட்சுமி மேனன்! என்ன படம்?
அடுத்தடுத்து கிடைத்த தோல்வியால் லட்சுமி மேனன், பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருக்கின்றது.
லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கியத்தில் வெளியான “கும்கி” படத்தில் அறிமுகமாகியவர் தான் லட்சுமி மேனன்.
இதனை தொடர்ந்து சசிகுமார், விஷால், அஜித் என டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இப்படியொரு நிலையில், கல்லூரி படிப்பை முடிப்பதற்காக சினிமா பயணத்திற்கு பிரேக் கொடுத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் இதுவே லட்சுமி மேனனின் மார்க்கட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
சினிமாவிற்குள் ரீ-என்றி கொடுக்கும் விதமாக லாரன்ஸுடன் இணைந்து “சந்திரமுகி - 2” படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
புது படத்தில் கமிட்டாகிய புகைப்படங்கள்
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த திரைப்படம் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனை ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பெயரிடப்படாத இந்த படத்தில் பிளாக் பாண்டி, ஜெயிலர் தன்ராஜ், வையாபுரி, மைம் கோபி, கனிமொழி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கமிட்டாகியுள்ளன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |