இந்த சீக்ரெட் மந்திரம் தெரியுமா? ஜெபித்தால் வீட்டில் செல்வம் கொட்டும்!
எப்போதும் நமது வீடுகளில் செல்வம் நிறைந்திருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது.
என்ன கஷ்டம் வந்தாலும் செல்வம் இருந்தால் அதனை சரிச் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் நினைப்பதை விட அதிகமாகவே உள்ளது. வீட்டில் செல்வம் நிறைந்திருக்க உழைப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தெய்வ அருளும் முக்கியம்.
பண வரவை அதிகரிக்க சில வழிபாடுகள் உள்ளன. இதனை தொடர்ந்து செய்யும் பொழுது கேட்ட வரன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சக்தி வாய்ந்த மந்திரங்களை உச்சரிக்கும் ஒருவருக்கு கேட்ட வரம் கிடைக்கும். அப்படியாயின், லட்சுமி குபேர மந்திரம் சொல்லும் ஒருவருக்கு கிடைக்கும் பலன்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
பலன்கள்
பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் 11 வகையான தன யோகங்களை விளக்கமாக கூறுகிறது. பாவார்த்த ரத்னாகரம், சங்கீதநிதி ஆகிய புத்தகங்களில் தன யோகங்கள் நிறைந்துள்ளன.
உதாரணமாக, 2-ம் பாவ அதிபதி 11-ம் இடத்திலோ அல்லது 11-ம் பாவ அதிபதி 2-ம் இடத்திலோ சரியாக அமைந்து விட்டால் அது குறித்த நபரின் குபேர யோகத்தை குறிக்கிறது என்று பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற யோகங்கள் ஒருவருடைய பூர்வ புண்ணியத்தை பொறுத்து அமையும் நம்முடைய பிறப்பு, பெற்றோர், கர்ம வினைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு யோகங்கள் கிடைக்கும்.
தற்போது தலையோங்கி இருக்கும் கலியுகத்தில் கர்ம வினைகள் நீங்கி, சகல நன்மைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக மஹரிஷிகள் பல மந்திரங்களை ஞான திருஷ்டியால் கண்டறிந்துள்ளனர்.
லட்சுமி குபேர மந்திரம்
லட்சுமி குபேர மந்திரம் உச்சரிக்கும் பக்தர்களுக்கு செல்வம் நிரம்பி வழியும். அந்தளவிற்கு சக்தி வாய்ந்த மந்திரமாக உள்ளது.
விவரங்கள்
- ரிஷி: விஸ்ரவர்
- சந்தஸ்: ப்ருஹதி
- தேவதை: சிவமித்ர தனேச்வரர்
மந்திரம்
ஓம் ஹ்ரீம் யட்சாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்யஸ் ஸ்ம்ரிதிம் மே தேஹி தாபய ஸ்வாஹா
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மை கமலதாரிண்யை சிம்ஹவாஹின்யை ஶ்ரீயை நம ஸ்வாஹா
எப்படி செய்யலாம்?
லட்சுமி குபேர மந்திரத்தை குரு அல்லது வேதம் கற்ற சாஸ்திரிகளிடம் உபதேசம் பெற்று, அங்கநியாசம், கரநியாசம் மற்றும் பூர்வாங்க பூஜைகளை முறையாக செய்ய வேண்டும்.
அதன் பின்னர், ஒரு சிவாலயத்தில் அல்லது வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து 1 லட்சம் தடவைகள் உச்சரிக்க வேண்டும்.
மந்திரத்தை சரியாக சொல்ல முடியாதவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார் கூறிய பதிகத்தைப் பாராயணம் செய்து பார்க்கலாம். இது இறைவனைப் பாடி பொற்காசுகள் பெறப்பட்டவையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |