விருந்துக்கு அழைத்துச் சென்ற பெண் பொலிசை சீரழித்த வாலிபர்: படமெடுத்த தாய்! கொடுமையின் உச்சம்
இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் விருந்துக்கு அழைத்துச் சென்ற பெண் பொலிஸ் ஒருவரை காதலன் உட்பட 4 பேர் சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காவல்துறையில் வேலை செய்துவந்த நிலையில், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலமாக ஆண் ஒருவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.
மேலும் நீண்ட காலமாக இருவரும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்ட நிலையில், குறித்த இளைஞரின் சகோதரருக்கு பிறந்தநாள் என்பதால் விருந்து ஏற்பாடு செய்துள்ளதாக பெண் பொலிசை வீட்டிற்கு அழைத்துள்ளனர்.
இளைஞரின் வார்த்தையை நம்பி வந்த பெண் பொலிசை குறித்த வாலிபர் மற்றும் சகோதரர் மேலும் 2 பேர் உட்பட நான்கு பேர் வன்கொடுமை செய்து ஆபாசமாக படமெடுத்துள்ளனர். இந்த கொடுமைகளுக்கு எல்லாம் வாலிபரின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
பின்பு ஆபாச படத்தினை காட்டி மிரட்டலில் ஈடுபட்ட அவர்கள் மீது குறித்த பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.