வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய பெண் மருத்துவர்! அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் பெண் மருத்துவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அர்ச்சனா சர்மா பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணிற்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் சிசிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். கர்ப்பிணி பெண் சாவுக்கு அர்ச்சனாவின் தவறான சிகிச்சையே காரணம் என அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
மேலும் அவர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினார்கள் இதையடுத்து பொலிசார் மருத்துவர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.
#PressRelease: We call upon the whole Medical fraternity to join us for Candle-Light Protest on 31/03/2022, 6:30 p.m. at Jantar Mantar, New Delhi condemning the tragic incident of suicide by Doctor in #Rajasthan following harassment by patient’s attendants @ashokgehlot51 @ANI pic.twitter.com/G10s2bruO5
— FORDA INDIA (@FordaIndia) March 30, 2022
என் மீது வேண்டும் என்றே பழி சுமத்துகிறார்களே என தவித்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனை மேல் மாடியில் இருந்த வீட்டில் துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு டாக்டர் அர்ச்சனா சர்மா உருக்கமான கடிதம் எழுதி வைத்து இருந்தார்.
அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- நான் என் கணவர் மற்றும் 2 குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பிறகு அவர்களை துன்புறுத்தாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவும் இல்லை.

அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். இவ்வாறு அவர் உருக்கமாக எழுதி உள்ளார்.
பெண் டாக்டர் உயிரை மாய்த்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அம்மாநில முதல்- மந்திரி அசோக் கெலாட் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில் சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக பொலிசார் நியாயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தி வருவதாகவும் அசோக் கெலாட் கூறினார்.
அந்த சம்பவம்... கண்கலங்கியபடி பேசிய கிறிஸ் ராக்- எழுந்து நின்று கைதட்டிய ரசிகர்கள்