பெண்களுக்கு பேரழகு சேர்க்கும் துப்பட்டா! பலருக்கு தெரியாத ரகசியம்
பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
தோகை விரித்தாடுவது மயிலுக்கு பேரழகு சேர்ப்பதுபோல், துப்பட்டாக்கள் இப்போது பலவிதமான டிசைன்களில் பெண்களுக்கு பேரழகு சேர்த்துக்கொண்டிருக்கிறது.
முன்பு ஜாடிக்கு ஏற்ற மூடி போன்று சாதாரணமாக காணப்பட்ட துப்பட்டாக்கள் இப்போது தனி அழகு பெற்று மிளிர்கிறது.
விழாக்காலங்களில் தங்கத்தில் ஒரு சங்கிலி வாங்குவது போன்று, ஒரு ஜோடி கம்மல் வாங்குவது போன்று இதனையும் பெண்கள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி அணிகிறார்கள்.
அத்தகைய துப்பட்டாக்கள் ஒட்டுமொத்த உடை அழகையும் மெருகேற்றுவதுதான் அதற்கான காரணம்.
பெண்களின் கேஷூவல் உடைகளில் இருந்து சுடிதாரும், சல்வாரும் சற்று பின்வாங்கியதால், பலாஸோ போன்ற இந்தோ- வெஸ்டர்ன் கலப்பு ஆடைகள் அந்த இடத்தை நோக்கி முன்னேறிச் சென்றாலும் துப்பட்டா மட்டும் தனது தனித்துவத்தை இழக்காமல் ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
பார்ட்டிகளில் பலரையும் கவர காஞ்சிபுரம் அல்லது பனாரஸ் துப்பட்டா போதுமானதாக இருக்கிறது.
லெஹங்கா, சல்வாருக்கு மட்டுமின்றி ஆங்கிள் லென்த் அனார்கலிக்கு வின்டேஜ் லுக் கொண்ட ஜரிகை துப்பட்டாவும் இப்போது பேஷனாக இருந்துகொண்டிருக்கிறது.
கொஞ்சம் பார்மலாக தோன்றவேண்டும் என்றால் அத்தைகய துப்பட்டாக்கள் போது மானது.
பார்டர் அவுட்.. டீட்டெயிலிங் இன்..
பார்டர் லெஸ் துப்பட்டாக்கள் சமீபகாலமாக அதிக மவுசு பெற்றிருக்கிறது. பிரீச், ப்ளீட்ஸ், கேதர்ஸ், போம் போம், டஸ்சல் இப்படி இந்த புதிய வகை துப்பட்டாக்களுக்கு அழகு சேர்க்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த வகையிலான டீட்டெயிலிங் துப்பட்டாக்களால் பார்டர் துப்பட்டாக்கள் பொலிவிழந்திருக்கின்றன.
டை அன்ட் டைய்
டை அன்ட் டைய் துப்பட்டாக்கள் என்றால் முன்பெல்லாம் வெள்ளை வட்டத்திலான டிசைன்களை கொண்ட சுங்கிடி துப்பட்டாக்கள் மட்டுமே இருந்தன.
இப்போது அலங்காரங்களை கொண்ட அபூர்வமான டிசைன்களெல்லாம் இதில் வருகை தந்திருக்கின்றன. இளம் பெண்கள் இதனை விரும்பி வாங்குகிறார்கள். ஷிபோரி, பாந்தினி, க்ளாம்ப் டை, லெகரியா, இக்கத்.. என்று அந்த பட்டியல் நீளுகிறது.
ஹேன்ட் பெயிண்ட்டட் துப்பட்டா
ப்ளோரல் பெயிண்டிங்குகளும், கலம்காரி, மதுபானி, வார்லி, மியூரல் போன்றவைகளும்- மரபுசார்ந்த படங்களும் இந்த வகை துப்பட்டாக்களில் இடம்பெறுகின்றன. கையால் பெயிண்ட் செய்யப்படும் இவைகள் எல்லா காலத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கின்றன. அதனால் இதனை டீன்ஏஜ் பெண்களும், நடுத்தர வயது பெண்களும் விரும்பி வாங்குகிறார்கள்.
பாட்ச் துப்பட்டா
பலவிதமான பாப்ரிக்குகளை இணைத்து தைக்கப்படுவது, பாட்ச் துப்பட்டாவாகும். மேட்சிங் கலர்களில் இணைக்கப்படுவதால் இது பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றும். ஒரே மாதிரியான பாட்ச்களையோ, மாறுபட்ட பாட்ச் களையோ இதில் இணைக்கலாம்.
நேர்த்தியாக தைப்பதிலும், பொருத்தமான கலர்களை தேர்ந்தெடுப்பதிலும் இதன் அழகு அடங்கியிருக்கிறது. சற்று முரட்டுத் தனமான, வித்தியாசமான லுக்கில் வலம் வர விரும்பும் டீன்ஏஜ் பெண்கள் ஜீன்ஸ்- குர்தாவுடன் இதை அணிந்து வலம் வரலாம்.
டபுள் துப்பட்டா
மணப்பெண்களுக்கான உடை அலங்காரத்திற்கு மிக பொருத்தமாக அமைவது, டபுள் துப்பட்டா.
மார்பக பகுதியை கவர் செய்யும் ஒரு துப்பட்டாவோடு- தலையிலோ, வலது தோள்பட்டையிலோ இரண்டாவது துப்பட்டா பரவிக்கிடக்கும். இது ஒரு வித்தியாசமான ஸ்டைலை உருவாக்கும்.
விலை சற்று அதிகமாக இருந்தாலும் இது கலர்புல்லான, கம்பீரமான அழகைத் தருவதால் மணப்பெண்கள் இதனை விரும்புகிறார்கள்.
இரு பக்க துப்பட்டா
இரு பக்கமும் வெவ்வேறு விதமாக அழகுதரும் வித்தியாசமான துப்பட்டா இது. இருபக்கங்களிலும் கவரும் விதமாக டிசைன் செய்திருப்பார்கள். இருபக்கமும் ஐடன்டிக்கலான காந்தா எம்ப்ராய்டரியை பதித்திருப்பார்கள்.
இரண்டு பக்கங் களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் இரண்டு நாட்கள் இதை பயன்படுத்தலாம் என்பதால் விரும்பி தேர்ந்தெடுக்கிறார்கள்.