நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது?

Cholestrol Healthy Food Recipes Immune System
By Vinoja Jun 09, 2024 05:30 PM GMT
Report

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் ஆகியன நிறைந்து காணப்படுகின்றது.

இது கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது? | Ladies Finger Vadai Recipe In Tamil

இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் காணப்படுகின்றது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காயை அதன் வளவளப்பு தன்மை காரணமாக பலரும் சாப்பிடுவதற்கு விரும்புவதில்லை.

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது? | Ladies Finger Vadai Recipe In Tamil

வெண்டைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் வெண்டைக்காயை வைத்து அட்டகாசமான சுவையில் மொறு மொறு வடை எவ்வாறு செய்யவாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கறிக்குழம்பு சுவையில் தக்காளி குழம்பு வேண்டுமா? பத்தே நிமிடத்தில் செய்யலாம்!

கறிக்குழம்பு சுவையில் தக்காளி குழம்பு வேண்டுமா? பத்தே நிமிடத்தில் செய்யலாம்!


தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - 1 கப்

வரமிளகாய் - 3

சோம்பு - 1/2 தே.கரண்டி

பூண்டு - 5 பல்

வெண்டைக்காய் - 10 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)

 உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது? | Ladies Finger Vadai Recipe In Tamil

செய்முறை

முதலாவதாக கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பு நன்கு ஊறியதும், அதை நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்

பின்னர் வரமிளகாய், பூண்டு, சோம்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது? | Ladies Finger Vadai Recipe In Tamil

பின்னர் அதனுடன் ஊற வைத்த கடலைப்பருப்பையும் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்ததை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும். 

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது? | Ladies Finger Vadai Recipe In Tamil

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர்  ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த வெண்டைக்காய் வடை தயார். 

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய் வடை... எப்படி செய்வது? | Ladies Finger Vadai Recipe In Tamil

வெங்காய வடை மொறுமொறுன்னு இருக்கணுமா? இந்த பொருளை சேர்த்து செய்ங்க

வெங்காய வடை மொறுமொறுன்னு இருக்கணுமா? இந்த பொருளை சேர்த்து செய்ங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US