சுகர் நோயாளிகளும் ருசித்து ருசித்து சாப்பிடக்கூடிய வெண்டைக்காய் மோர் குழம்பு
வெண்டைக்காயில் கூட்டு, பொரியல், துவையல் என்று பல வகை உணவுகளை செய்து ருசிக்கலாம்.
உங்கள் உணவில் வெண்டைக்காயை அதிகமாக சேர்த்துக் கொண்டால் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
வெண்டைக்காயில் வைட்டமின் ஏ அளவுக்கு அதிகமாக உள்ளது. வெண்டைக்காயில் பீட்டா கரோட்டீன், சான்தீன் மற்றும் லூட்டீன் போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்களும் வளமாக உள்ளது.
வெண்டைக்காய்யில் உள்ள பலவிதமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும். நீரிழிவு நோயை நெருங்க விடாமல் தடுக்க வெண்டைக்காய் உதவி புரிகின்றது.
வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
- வெண்டைக்காய் - 10
- தயிர் - 1 1/2 கப்
- சிவப்பு மிளகாய் - 4
- கடுகு - கால்
- தேக்கரண்டி சீரகம் - 1
- தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான
- சிறிய வெங்காயம் - 2
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு - 2 பற்கள்
- தேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை உப்பு சேர்த்து வறுக்கவும் மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிச்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் புளித்த தயிருடன் அரைத்த மசாலா விழுதை சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் வறுத்த வெண்டைக்காய், தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க விடவும்
சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்