குழந்தை பாக்கியத்தை பெற வளையல் பிரசாதம்! எப்படி செய்வது?
ஆண்டாளுக்கு கொண்டாடப்படும் அவதார திருநாள் ஆடிப்பூரம்.
இந்த திருநாளில் சுமங்கலி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் தேங்காய்பழம், வெற்றிலை பாக்கு, ரவிக்கை வைத்து கூடுத்தால் ஐஸ்வர்யம் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலையில் 10 நாட்கள் ஆடிப்பூரம் திருநாள் நடையேறும்.
மேலும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் 3 நாட்கள் இந்த ஆடிப்பூரம் திருநாள் நடைபெறும்.
ஆடிப்பூரம் கொண்டாட்டம் அன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.
இந்த விழாவில் அம்மனை தரிசித்து பின் பிரசாதமாக வளையல் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வளையலை பெற்று வீட்டில் வைத்தால் அங்கு சர்வ மங்கலங்களம் பொங்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |