ஒரே மாதத்தில் தொங்கும் தொப்பைக்கு குட்பை சொல்லணுமா? இந்த கஞ்சி ஒன்னே போதும்
பொதுவாகவே ஆண்களுக்கு சரி பெண்களுக்கம் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
ஆனால் அதிகதரித்த வேலைபளு, ஒரே இடத்தில் அமர்ந்தபடி அதிக நேரம் வேலைப்பார்ப்பது மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் உடல் எடை வெகுவாக அதிகரித்துவிடுகின்றது.
இன்னும் சிலருக்கு அதிக நேரம் அமர்ந்து வேலைப்பார்ப்பதால் தொப்பபை மட்டும் பெருத்து உடல் அமைப்பையை அசிங்கமாக காட்டுகின்றது.
இந்த பிரச்சினைக்கு வெகு விரைவில் தீர்வு கொடுக்கும் குதிரைவாலி பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த கஞ்சியை தொடர்ந்து 30 நாட்களுக்கு காலை உணவாக எடுத்துக்கொண்டால் தொப்பபை பிரச்சினைக்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.
தேவையான பொருட்கள்
குதிரைவாலி அரிசி - 3/4 கப்
பச்சை பயறு - 1 கப்
பூண்டு - 5 பல்
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1 கைப்பிடியளவு
செய்முறை
கஞ்சி செய்வதற்கு தேவையான பச்சை பயிறை முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றான ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
காலையில் குதிரைவாலி அரிசியை குக்கரில் எடுத்து, நன்றாக கழுவி அதனுடன் ஊற வைத்த பச்சை பயறை சேர்க்க நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் பூண்டு பற்கள் மற்றும் வெந்தயத்தை சேர்த்து, அரிசியும், பயறும் மூழ்கும் அளவில் தண்ணீர் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு நன்றாக கலந்துவிட்டு குக்கரை அடுப்பில் வைத்து,7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
ஆறியதும் குக்கரைத் திறந்து நன்கு கலந்து விட வேண்டும். கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு தண்ணீர் நேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக துருவிய தேங்காயை தூவினால் அவ்வளவு தான் குதிரைவாலி பச்சை பயறு கஞ்சி தயார். இது உடல் எடைக்குறைப்புக்கு பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |