அப்போ 13 வயசு.. இப்போ 52 வயசு! அப்படியே இருக்கீங்களே- அழகி புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பூ
இணையதளத்தில் நடிகை குஷ்பூ தனது 13 வயசு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
13 வயசு புகைப்படத்தை வெளியிட்ட குஷ்பூ
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார் குஷ்பூ.
இவர் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார். எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவர் சின்ன வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அடடா... என்ன அழகாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Me at 13 and now, at 52. ❤️ pic.twitter.com/ulVt6DQgrS
— KhushbuSundar (@khushsundar) May 18, 2023