உடனே அறைந்து விடுவார்.. மாமியாருடன் நடக்கும் சண்டை- இறுதியாக சுந்தர் சிக்கு குஷ்பு போட்ட கண்டிஷன்
நடிகை குஷ்பூ மாமியாருடன் போடும் சண்டைகளை சுவாரஷ்யமாக பகிர்ந்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ.
இவர் சினிமாவில் டாப்பில் இருந்த காலக்கட்டத்தில் இயக்குநர் சுந்தர் சி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பூ தனது கணவர், குழந்தைகள் பற்றி பல பேட்டிகளில் பேசியுள்ளார்.
மாமியாருடன் சண்டை போடுவேன்..
ஆனால் முதல் தடவையாக மாமியாரின் லீலைகளை ஓபனாக பேசியிருக்கிறார்.
அதில், “ கல்யாணத்துக்குப் பிறகு என்னுடைய மாமியாரை என்னோடு வைத்து கொண்டேன். எவ்வளவு சண்டை வந்தாலும் என்னை விட்டுக் கொடுத்து பேச மாட்டார். என்னுடைய கணவர் தான் அவரின் செல்லப்பிள்ளை. ஆகையால் அவரும் அம்மாவை விட்டுக் கொடுக்கமாட்டார்.
என்னை பற்றிய யாராவது தவறாக பேசினால் அவர்களை பார்த்து, “ நீ யாரு ஏ மருமகள் பற்றி பேச..” என கேட்பார். தற்போது 91 வயதாகிறது. ஆனால் இரவு 10 மணியானால் கண்டிப்பாக எனக்கு கோல் செய்து கணவர், குழந்தைகள் பற்றி விசாரிப்பார்.
சுந்தர் சி என் அம்மாவுடன் பேசினால் அப்போது எங்கள் வீட்டில் பிரியாணி தான். ஏ என கேட்டால் “சுந்தர் சி என்னோடு பேசினார்” என்பார். என்னுடைய முதல் பெயர் நக்கத் என்பதால் என்னுடைய அம்மா இன்னுமே என்னை “நாகத் ” என்றே அழைப்பார்...” என சுவாரஷ்யமாக பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |