முதல் படமே மணிரத்னம் படமா? கமலுடன் இணையும் குஷ்பு மகள் - என்ன ரோல் தெரியுமா?
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை குஷ்பு
பாலிவுட்டை போன்று தமிழ் சினிமாவில் தனக்கு பின்னால் தன்னுடைய மகள்களும் சாதிக்க வேண்டும் என நினைக்கும் பிரபலங்களில் குஷ்புவும் ஒருவர்.
தமிழ் சினிமாவில் 90களில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இளசுகளை கட்டி போட்டவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள்.குஷ்புவின் குழந்தைகள் இருவரும் அவரை போல் குண்டாக இருப்பதால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக உருவ கேலி செய்யப்பட்டனர்.
இந்த சர்ச்சைகளுக்கு ஒரு அம்மாவாகவும் அரசியல்வாதியாகவும் இருந்து குஷ்பு பதிலடிக் கொடுத்தார்.
இந்த வாரம் முதல் ஆளாக சேவ்வான பெண் போட்டியாளர்.. அப்போ இந்த ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்- கணிப்பு பலித்தது!
இவரின் மூத்த மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
கமலுடன் இணையும் இளைய மகள்
இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள கமலின் 234 ஆவது படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா இணைந்துள்ளார்.
35 ஆண்டுகள் கழித்து தற்போது கமல் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து இருக்கின்றனர். மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த கமல் தற்போது தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.
அத்துடன் படப்பிடிப்பிற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது அதற்கான வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதாவும் இணைந்து இருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் ஷாக்காகியுள்ளனர். குஷ்புவின் ஆதிக்கத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
Thanks a ton Latha ❤️❤️❤️ https://t.co/NRcUrBTLeQ
— KhushbuSundar (@khushsundar) October 27, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |