முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் குஷ்பு மகள்... வைரலாகும் புதிய புகைப்படங்கள்!
நடிகை குஷ்புவின் மூத்த மகளான அவந்திகா முன்னணி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில், ட்ரெண்டிங் சேலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடுக்கட்டி பறந்த நடிகை தான் குஷ்பு. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
ஆனாலும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் புதிய சீரியலிலும் தற்போது களமிறங்கியுள்ளார்.
குண்டாக இருந்த குஷ்பு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். அண்மையில் இளம் நடிகையை போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு டிரெண்ட்டானார்.
ரசிகர்கள் பாராட்டுகளையும் பிரபலங்களின் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வந்தனர். பார்ப்பதற்கு குஷ்பூ போன்று இருக்கும் அவருடைய இரு மகள்களும் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு, பெற்றோருடன் இணைந்து சினிமாவில் ஈடுபாடுகாட் வருகின்றனர்.
அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களில் கிளாமர் மற்றும் ட்ரெடிஷனல் லுக்குகளில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் குஷ்புவின் மூத்த மகளான அவந்திகா, தற்போது ட்ரெண்டிங் சேலையில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |