கையில் 300 ரூபாய் இருக்கா? அப்போ அழகிய தீவை சுற்றிபார்ப்போம் வாங்க
குறைந்தளவில் செலவு செய்து குருசடை தீவில் உள்ள பலவிடயங்களை கண்டுகளித்து வரலாம். அத பற்றிய முழு விபரத்தை இங்கு பார்ப்போம்.
குருசடை தீவு
ராமநாதரபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் அருகே குந்துகால் கடற்கரை உள்ளது. குந்துகால் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் படகில் பயணித்தால் குருசடை தீவை அடையலாம்.
இங்கே சுற்றுலா மேற்கொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் பாலம் செல்லும் வழியில் 14 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அங்கு குந்துகால் கடற்கரை வரும்.
குந்துகால் கடற்கரை செல்வதற்கு பேருந்து அல்லது ஆட்டோ எடுத்துக்கொள்ளலாம். இந்த குருசடை தீவு மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளில் ஒன்றாகும். இங்கே சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் சுற்றுலா தொடங்கப்பட்டது.
இந்த தீவிற்கு செவ்வாய்கிழமை சுற்றுலா மேற்கொள்ள முடியாது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே குருசடை தீவு பயணம் அனுமதிக்கப்படுகிறது.
ஒரு நபருக்கு தலா 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கே படகில் பயணிக்கும் போது தண்ணீருக்கு அடியில் வண்ண வண்ண மீன்கள், பவள பாறைகள் தென்படும்.
மிதக்கும் பவள பாறைகளையும் காணலாம். குருசடை தீவின் நுழைவுவாயிலில் திமிங்கலம், சுறா, ஆமை, டால்பின்களின் மண்டை ஓடுகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |