ஹாய் பொண்டாட்டி... மாதம்பட்டி ரங்கராஜை கலாய்த்த குரேஷி! தீயாய் பரவும் காணொளி
மாதம்பட்டி ரங்கராஜை கலாய்ப்பது போல குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது மனைவிக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரான ரங்கராஜ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளில் சமையல் ஆர்டர் எடுத்து அதனை பிரம்மாண்டமாக செய்து வருபவர் ரங்கராஜ்.
ஆனால் அண்மை காலமாக இணையத்தில் இவரின் பெயர் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது, காரணம் முதல் மனைவியுடன் வாழும் போதே அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது.
அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டதாகவும், கருகலைப்பு செய்ய தூண்டியதாகவும் ஜாய் கிரிஸில்டா சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் புகார் கொடுத்தார்.
அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை பொண்டாட்டி என கூப்பிட்டு பேசியதாக காணொளியொன்றை ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருந்தார். குறித்த காணொளி இணையதளத்தில் வைரலாகியது.
குறித்த காணொளியில் தான் எழுந்தது, குளித்தது, சாப்பிட்டது, வேலைக்கு செல்வது என பல விஷயங்களை பற்றி மாதம்பட்டி ரங்கராஜ் குறிப்பிட்டிருந்தார்.
குரேஷியின் காணொளி
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை கலாய்ப்பது போல குக் வித் கோமாளி புகழ் குரேஷி தனது மனைவிக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
