100 யானைகளை விரட்டியடித்த கலீம் யானைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள்.... - வைரல் வீடியோ...!
100 யானைகளை விரட்டியடித்த கலீம் யானைக்கு மரியாதை செலுத்திய காவலர்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கலீம் யானைக்கு மரியாதை செலுத்திய காவலர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிபில் உள்ள 60 வயதான கும்கி கலீம் ஓய்வு பெற்றதால் வனத்துறை காவலர்கள் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த கும்கி கலீம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா , கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று நகருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்டும் பணியை செய்து வந்தது. 100 யானைகளை விரட்டியடித்த கலீம் ஒருமுறை கூட தோற்றதில்லையாம்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#WATCH: Kumki elephant Kaleem receives guard of honour on retirement day#Kumki #Elephant #Kaleem #GuardofHonour #RetirementDay #Trending #Animal #TrendingNow pic.twitter.com/BfcQRlsMTh
— HT City (@htcity) March 9, 2023