கும்பகோணம் பாணியில் காரசாரமான தக்காளி சட்னி... ஒரு முறை இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. சட்னி என்றாலே தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் விருப்ப தெரிவாக இருக்கும்.
![panner pepper masala: புரோட்டீன் குறைபாடுக்கு தீர்வு கொடுக்கும் பன்னீர் மிளகு மசாலா... எப்படி செய்வது?](https://cdn.ibcstack.com/article/94d5fb8c-fd0d-4d15-a6e2-af4f07d58754/25-67a5e60ebebde-sm.webp)
panner pepper masala: புரோட்டீன் குறைபாடுக்கு தீர்வு கொடுக்கும் பன்னீர் மிளகு மசாலா... எப்படி செய்வது?
அப்படி வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும்,தக்காளி சட்னியை எப்போதும் வழக்கமான முறையில் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் கும்பகோணம் பாணியில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 4 (நறுக்கியது)
பூண்டு - 8 பல்
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு -2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு -1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
வெல்லம் - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் நன்கு வறுத்து, அத்துடன் உளுத்தம் பருப்பு சேர்த்து, வாசனை வரும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து அதில் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 10 நிமிடங்கள் வரையில் வதக்கி, சீரகம் மற்றும் சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றுடன் வதக்கிய தக்காளியையும் சேர்த்து, ஓரளவு கொரகொரப்பான பதத்தில் அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், நாவூரும் சுவையில் கும்பகோணம் தக்காளி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |