குடும்பஸ்தன் திரைப்பட பணியாளர் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
குடும்பஸ்தன் திரைப்பட பணியாளர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
குடும்பஸ்தன்
தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளியாகி வெற்றி நடைப்போட்ட படங்களில் ஒன்று தான் குடும்பஸ்தன்.
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
மிடில் கிளாஸ் வாழ்க்கை பற்றிய ஒரு அருமையான படமாக பார்க்கப்படுகிறது. இதில் நமக்கு பழக்கமான பல நடிகர்கள் இருந்தாலும் புது முகங்களின் நடிப்பு வரவேற்கப்பட்டது.
திடீர் மரணம்
இந்த நிலையில், தற்போது குடும்பஸ்தன் படத்தில் பணிபுரிந்த ஒரு பிரபலம் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.
அவர், கலை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் கல்லேரி (56) நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் உடல்நலக் குறைவால் காலமானார்.
மேலும், அநீதி, மத்தகம் உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |