தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம் - பணமழையில் நனையப்போகும் ராசிகள்
ஜோதிடத்தின்படி, ஏப்ரல் 14 ஆம் தேதி உருவாகும் 'குபேர யோகத்தால்' குறிப்பிட்ட ராசிக்காரர்கள் பணம் செல்வம் சொத்து என பெருமின்பத்தை பெறப்போகின்றனர்.

குபேர யோகம்
ஜோதிட சாஸ்திரப்படி, ஏப்ரல் 14 அன்று சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதே நேரம் அங்கு செவ்வாயும் இருக்கிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இணைவதால் 'குபேர யோகம்' உருவாகிறது. ஜோதிடத்தின்படி இந்த யோகம் செல்வத்தை அள்ளி தரும் யோகமாக பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் லட்சுமியின் ஆசிர்வாதம் குறிப்பிட்ட ராசிகளுக்கு கிடைக்கும். இதனால், அவர்கள் செல்வம், சொத்து, மகிழ்ச்சி, செழிப்பு என எதற்கும் குறைவில்லாமல் வாழ்வார்கள்.
திடீர் பண வரவுக்கான வாய்ப்புகளும் உருவாகும். இந்த நிலையில் இன்னும் பல பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
- நீங்கள் முயற்ச்சி செய்யும் ஒவ்வொரு விடயமும் வெற்றி பெறும்.
- உங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
- நிதி ஆதாயம் பெற நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்.
- புதிய வருமானம் கிடைக்க வழி பிறக்கும்.
சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்கள் குபேர யோகத்தால் சிறப்புப் பலன்களை அனுபவிப்பார்கள்.
- உங்களுக்கு வீட்டிலும் வெளியிலும் அளவில்லா மகிழ்ச்சி பெருகும்.
- குடும்பத்தில் இருந்த விரிசல்கள் சீராகும்.
- நீங்கள் கனவாக நினைத்த விடயங்கள் நனவாகும்.
- பணத்திற்கு துளி அளவு கூட பஞ்சம் இருக்காது.
துலாம்
- குபேர யோகத்தின் தாக்கம் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.
- உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும்.
- செய்து வந்த வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
- திருமண வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
- சமூகத்தில் இவர்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
தனுசு
- ஜோதிடத்தின்படி, குபேர யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.
- உங்கள் ராசிக்கு நிதி நிலமை உயரும்.
- செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
- தற்போது வேலையில் இருப்பவர்கள் உயர் பதவிக்கு செல்வீர்கள்.
- சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).