மகளின் மரணத்தின் பின் கடவுளை மறந்த பாடகி - சித்ராவின் சோக கதை தெரியுமா?
தனது மகளின் மரணத்திற்கு பின்னர் தான் அனுபவித்த கடுமையான மன உளைச்சல் மற்றும் கடவுளை மறந்தது பற்றி பாடகி கே.எஸ். சித்ரா மனம் திறந்து பேசி உள்ளார்.

பாடகி சித்ரா
தென்னிந்தியாவின் சின்னக்குயில் சித்ரா என்றால் சிறு பிள்ளைக்கும் தெரியும். சித்ரா பல மொழிகளில், பல விதமான பாடல்களைப் பாடியுள்ளார்.
சித்ரா என்னதான் நம்மை அவர் குரலால் கவலைகளை மறக்க செய்தாலும் அவருக்குள்ளும் ஒரு கவலை இருப்பது பலருக்கும் தெரியாது. சித்ராவின் மகள் நந்தனா, இந்த உலகை விட்டுப் பிரிந்து தற்போது 15 வருடங்கள் ஆகிவிட்டது.
சித்ராவின் குழந்தை 2011-ல் துபாயில் உள்ள ஒரு வில்லாவின் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அப்போது குழந்தையின் வயது ஒன்பது. அந்த அதிர்ச்சியில் இருந்து சித்ரா எப்படி மீண்டு வந்தார் என்பதை பற்றி தற்போது மனந்திறந்து பேசி உ்ளளார்.

நேர்காணல்
இந்த சம்பவத்தின் பின்னர் சித்ராவை மீண்டும் திரைப்படத்தில் பாட வைக்க ரஞ்சினி ஹரிதாஸ், விஜய் டிவியின் ரௌஃப் போன்றவர்கள் அதிக முயற்சி செய்தார்கள்.
இப்படி பல முயற்ச்சிகள் சித்ராவை பாட வைக்க செய்யப்பட்டது. அந்த சமயத்தில்தான் லதா மங்கேஷ்கர் பெயரில்சித்ராவிற்கு ஒரு விருது கிடைத்தது. அந்த விருதை ஹைதராபாத் சென்று வாங்க வேண்டும்.
ஆனால் சித்ராவே வெளியே உங்கும் செல்ல மனநிலை இல்லாமல் இருந்துள்ளார். அப்போதுதான் லதா ஜி சித்ராவிற்கு போன் செய்து, 'நீ கண்டிப்பா வரணும்' என்று கூறினார்.
இதன் பின்னர் இளைய ராஜா நிகழ்ச்சியில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க நீண்ட இடைவெளிக்கு பின்னர் சித்ரா முதன் முறையாக பாடி உள்ளார். இந்த விடயங்களை சித்ரா தன்யா வர்மாவுடனான ஒரு நேர்காணலில் கூறி உள்ளார்.

கோவில் போக பிடிக்கவில்லை
மேலும் பேசிய சித்ரா "இப்படி எல்லாம் நடக்க நான் என்ன தப்பு செய்தேன்? யாரையாவது நான் காயப்படுத்தினேனா?
ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளிடம் ஏதாவது சொல்லி அவர்கள் மனதை நோகடித்துவிட்டேனா? அது சாபமாக இருக்குமோ? இப்படி பலவாறு சிந்தனைகள் போகும்.
நமக்கு என்ன எழுதியிருக்கிறதோ அது நடந்தே தீரும். எந்தக் கடவுளை வேண்டினாலும் சோதனைகள் வரும். அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியைத்தான் கடவுள் கொடுக்கிறார்.

அது யாரோ ஒருவரின் மெசேஜ் மூலமாகவோ அல்லது வேறு வழியாகவோ நமக்குக் கிடைக்கும். சில நேரம் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை.
எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், யாரையும் பார்க்க வேண்டாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில் திருச்சூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. தங்குவதற்காக ரூம் தேடியபோது, அது குருவாயூர் கோயில் நடைக்கு அருகில் அமைந்தது.
பகவான் என்னை மீண்டும் அழைப்பதாகவே எனக்குத் தோன்றியது. அன்று நான் கோயிலுக்குப் போனேன். நீண்ட நேரம் அழுதுவிட்டுத் திரும்பி வந்தேன்," என்றார் சித்ரா.
"இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால், நம்முடன் இருப்பவர்களின் வாழ்க்கையும் கஷ்டமாகுமே தவிர, நாம் இழந்தது திரும்பக் கிடைக்கப் போவதில்லை.

இது ஒரு கட்டத்தில் எனக்குப் புரிந்தது. என்னைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் சோர்ந்து போனால், அவர்களுடைய வாழ்க்கையும் சோர்ந்து போகுமல்லவா? நாம் பல கனவுகளைக் காண்போம்.
அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால், ஒரே ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடும். கடவுளின் முடிவுதான் இறுதியானது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் திட்டமிடுவதையே நிறுத்திவிட்டேன்” என்று சித்ரா கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |