இன்ப அதிர்ச்சியில் உறைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்! பார்ட்டியில் பிரபலங்கள் கொடுத்த சர்ப்ரைஸ்... லீக்கான வீடியோ
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
'ராஜமாதா' ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனது 51 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்த நாளில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சக நடிகைகள் ஏற்பாடு செய்த பிறந்த நாள் பார்ட்டியில் த்ரிஷா, குஷ்பு, ராதிகா சரத்குமார், மது, லிஸ்ஸி, அனு பார்த்தசாரதி, உமா ரியாஸ் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகருமான சுரேஷ் சக்ரவர்த்தி, நடிகர் நகுல், அவரது மனைவி ஸ்ருதி மற்றும் பலர் இந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து விஜய் டிவி பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் நடிகர் நகுல் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
