சிறப்பு விருந்தினராக வந்த பிரபலம்! மோதிரத்தை அபேஷ் செய்த அமுதவாணன்
பிக் பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளரான அமுதவாணன் ராமராஜன் போல் மேடையில் ஆடி தங்க மோதிரத்தை பரிசாக பெற்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் சாதணை
பிரபல தொலைக்காட்சிகளில் இருந்து வெளியேறிய தற்போது வெள்ளத்திரையில் நாயகர்களாக ஜொலிப்பவர்கள் தான் சிவகாரத்திகேயன், சந்தானம். இது போன்று தற்போது பல கலைஞர்களை உருவாக்கி வருகிறது.
இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் சீரியல்களும், நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.
இதன்படி, பிரபல தொலைக்காட்சி மக்களை என்டர்டைம் செய்யும் விதமாக கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சி வாரத்தில் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிப்பரப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை கலைஞர்கள் கலந்துக் கொண்டு தன்னுடைய திறமையால் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

கலக்க போவது யாரு சாம்பியன்ஸ்
இந்த நிலையில் இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் நடிகர் ராமராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டிருந்தார். அப்போது ராமராஜன் போல் வேடமிட்டு அமுதவாணன், ஸ்ருதியுடன் இணைந்து நிகழ்ச்சியொன்றை செய்தார்.
அவர் ஆடிய அதே பாட்டிற்கு இவரும் ஒரே மாதிரியான ரியாக்ஷன் கொடுத்ததை பார்த்து வியந்து போன ராமராஜன் அவருக்கு தன்னுடைய கையிலிருக்கும் மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ அமுதவாணன் நடிப்பில் விழுந்த ராமராஜன்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.