பிக்பாஸ் தொடங்கும் முன் இரண்டு சீரியல்களுக்கு வந்த சோதனை! எப்போது தொடக்கம்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக போகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் அக்டோபர் 9ஆம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார் என தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் ரசிகர்களும் உள்ளனர்.
அதன்படி பல லீக் போட்டியாளர்களின் பெயர்களும் அடிப்பட்டு வந்தன. இந்நிகழ்ச்சி வழக்கம் போல இந்த நிகழ்ச்சி இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதுமட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்குள் இரண்டு சீரியல்களையும் முடித்து வைக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதாவது, சிப்பிக்குள் முத்து என்ற சீரியலை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்து பல நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிகிறது.
எனவே இந்த இரண்டு சீரியல்களும் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.