லண்டனில் சாதனை படைத்த தமிழர்! கோடீஸ்வரனாகியது எப்படி?
தமிழர் ஒருவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தற்போது உலக பணக்காரர்களுப்ன் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.
இந்தியாவில் உள்ள கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் ஊரை சேர்ந்தவர் நந்த குமார். இவர் கோவையில் பொறியியல் படிப்புகளை படித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றினார்.
அதன் பின்னர், முன்னேற்றம் காண்பதற்காக சொந்த தொழில் செய்ய ஈடுப்பட்டுள்ளார். அதன்படி, லண்டனில் 'Kovaion' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினார்.
ஆரம்பத்தில் ஏழு எட்டு மாதங்களுக்கு தனியாக ஒரே ஊழியராக இருந்துள்ளார். நிறுவனம் மேலும் வளர வளர புதிய ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
இதைப்பற்றி இவர் தெரிவிக்கையில், இந்தியாவில் தொழில் தொடங்கவும் இங்கிலாந்தில் தொடங்குவதற்கு பெரியதாக வித்தியாசம் ஒன்றும் இல்லை. கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் போதும்.

அதை வைத்துக்கொண்டு எங்கள் தொழிலை முன்னேற்றத்திற்காக எடுத்துச்சென்றோம். Kovaion தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 50 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.
ஆரக்கிள் நிறுவனத்தின் சாப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படும். ஆனால், அந்த சாப்ட்வேரை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு customized செய்வதுதான் எங்களுடைய பணி. ஆரம்பத்தில் ஒரிரு நிறுவனங்களுக்கு மட்டும் சேவை வழங்கி வந்தோம்,
தற்போது 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது வருமானம் 3 மில்லியன் பவுண்ட்களுக்கு மேல் இருக்கிறது. கோவையான் என்று பெயர் வைத்திருந்தாலும் எங்களுக்கு கோவையில் அலுவலகம் இல்லை.
அதனால் கோவையில் மிகப்பெரிய அலுவலகத்தைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறோம். இதுவரை வெளியில் இருந்து முதலீடு ஏதும் இவர்கள் பெறவில்லை.
அடுத்த 10 ஆண்டுக்கு திட்டம் இருக்கிறது.
மேலும், ஆரக்கிள் தவிர, நாங்களே low code ஆப்களை உருவாக்க இருக்கிறோம் என நந்தகுமார் தெரிவித்தார்.