அப்போ ஜுலி, இப்போ ஷர்மிளா: பிக்பாஸ் வீட்டிற்கு இழுப்பதற்காகத்தான் கார் பரிசளித்தாரா கமல்?
தற்போது மொத்த ஊடகமும் ஓட்டுனர் ஷர்மிளாவை சுற்றிய வேளையில், கமல்ஹாசன் காரை பரிசாக கொடுத்த சம்பவத்திற்கான பின்னணி வைரலாகி வருகின்றது.
ஓட்டுநர் ஷர்மிளா
உலகெங்கிலும் இருக்கும் பெண்கள் தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக பல பல துறைகளை தெரிவு செய்து அதன் பாதையில் தங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கனவு கோவையைச் சேர்ந்த ஷர்மிளாவையும் விட்டு வைக்கவில்லை. அப்படி இவருக்கு ஏற்பட்ட இந்த கனவுதான் ஓட்டுநராக வேண்டும் என்ற கனவு.
இவருக்கு இந்த ஆசை தற்போது உருவானது அல்ல 7 வயதில் இருந்து உருவான ஆசைதான். அதிலும் பஸ் ஓட்டுநராக வேண்டும் என்பது தான். அவரின் ஆசையும் நிறைவேறி கோவை மாவட்டத்தில் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராக மாறினார்.
அப்படி பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். இவரை பணிநீக்கம் செய்தது தான் இன்று வரைக்கும் தலைப்புச் செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸிற்கான திட்டமா?
ஷர்மிளாவை பணி நீக்கம் செய்தவுடன் பலரும் இவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கார் ஓட்டி முன்னேற வேண்டும் என்று புதிய கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார்.
இவ்வாறு காரை பரிசாக கொடுத்தவுடன் பலரும் பல கேள்விகளை எழுப்பத்தொடங்கினார். இதற்கு முன்னரும் பல பிரச்சினைகள் வந்தது அப்போது இல்லாமல் இப்போது எதற்கு கமல் இப்படி செய்கிறார் என்று பலரும் பல கருத்துக்களை சொல்லிருந்தார்.
ஷர்மிளாவின் விடயத்தை வைத்து அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இழுக்கப்பார்க்கிறாரா என்ற கேள்வியும் எழுந்த வண்ணம் உள்ளது. ஏனெனில் முன்னதாக ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது ஜூலியும் அப்படித்தான் நிகழ்ச்சிக்குள் வந்தார்.
அதேபோல ஷர்மிளாவையும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு இழுக்கும் நோக்கத்திற்காகத் தான் கமல் கார் வாங்கிக் கொடுத்திப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |