11 வயது மகளுக்கு இது தேவையா? நடிகர் கொட்டாச்சியை திட்டும் நெட்டிசன்கள்
நடிகர் கொட்டாச்சி மகளின் பிறந்தநாளுக்கு அவர் ஆசைப்பட்ட கார் ஒன்றினை பரிசாக வாங்கிக் கொடுத்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் கொட்டாச்சி
தமிழ் சினிமாவில் கொமடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கொட்டாச்சி. இவர் வடிவேலு, விவேக் போன்ற முன்னணி கொமடி நடிகர்களுடன் நடித்து சிறந்த கொமடியனாக விளங்கினார்.
இவரது மகள் மானஸ்வி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார்.
பின்பு சில படங்களில் நடித்துள்ள இவர் மலையாளத்திலும் மை சாண்டா என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் அந்த ஆண்டின் குழந்தை நட்சத்திர விருதும் கிடைத்தது.
மகளுக்கு பிறந்தநாள் பரிசு
சமீபத்தில் நடிகர் கொட்டாச்சி மகள் மானஸ்வி பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவருக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றினை பரிசாக வாங்கி கொடுத்தார்.
இதனை காணொளியாக பதிவிட்டதுடன், ‘ என் தாய் தங்க மகளின் ரொம்ப வருட கனவு அவள் பிறந்தநாள் அன்று கடவுள் அருளோடு இந்த வருடம் நிறைவேறியது... கடவுளுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.
இதனை அவதானித்த நெட்டிசன்கள் இந்த சின்ன பொண்ணுக்கு இவ்ளோ பெரிய கார் தேவையா? என்று விமர்சித்த நிலையில், நடிகர் கொட்டாச்சி இதற்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.
‘பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற 13. லட்சம் என்றாலும் லோன் வாங்கி சந்தோஷப்படுத்தலாம் கஷ்டம் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டு இருந்தால் கடைசியில் கஷ்டம் மட்டுமே ஜெயிக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |