கர்நாடகா சென்றால் இந்த கோயிலை மறந்துறாதீங்க.. முழு விளக்கம் இதோ
பொதுவாக சிவன் கோயில் அதிகமான பக்தர்கள் செல்லும் வணக்கஸ்த்தலமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனின் சிவன் என கூறும் போது அனைத்து விதமான மக்களும் சென்று வழிபடுவார்கள்.
அந்த வகையில் உலகின் மிகப் பெரிய சிவலிங்கங்களைக் கொண்ட கோயில் கர்நாடகாவில் இருக்கின்றது. இந்த கோடிலிங்கேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகின்றது.
எனவே நீங்கள் எந்த நேரத்திலும் கர்நாடகாவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், அதை உங்கள் பயண பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பயணத்தின் போது பல சுவாரஸ்யங்களை நாம் எதிர்பார்த்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற கோயில்களுக்கு செல்லாம்.
அந்த வகையில், கோடிலிங்கேஸ்வரர் கோயில் பற்றி இன்னும் மேலதிகமாக தெரிந்து கொள்வோம்.
கோடிலிங்கேஸ்வரர் கோயில்
சாலைப் பயணங்கள், மலைவாசஸ்தலங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்வது போன்ற சுற்றுலாத் தலங்கள் பொதுவாக அனைவராலும் விரும்பப்படும்.
ஆனால் எவ்வளவு அழகான சுற்றுலாத் தலங்களாக இருந்தாலும், கோயில்களுக்குச் செல்வது மக்களின் இதயங்களில் தனி இடத்தைப் பெறுகிறது. கோடிலிங்கேஸ்வரர் கோயில் கட்டிடக்கலை அதிசயம் மற்றும் இயற்கை அழகிற்கு பெயர் பெற்ற தலமாக உள்ளது.
இந்த கோயில் கர்நாடகாவிலுள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பக்தர்கள் இங்கு கூடியிருப்பார்கள்.
கோடிலிங்கேஸ்வரர் கோயிலின் பெயருக்கு பின்னால் விளக்கம் இருக்கின்றது. அதாவது கன்னடத்தில், 'கோடி' என்பது ஒரு கோடியைக் குறிக்கிறது, மேலும் கோடிலிங்கேஸ்வரா ஒரு கோடி சிவலிங்கங்களைக் குறிக்கிறது.
சிறப்பு
இந்த கோயிலுக்கு அதிகமான பயணிகள் வருவதற்கான முக்கிய காரணம் இங்கு அற்புதம் நிறைந்த நிறைய அமைப்புகள் இருக்கின்றது.
மேலும் இந்த கோயிலில் கல், பித்தளை, வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பல ஆயிரம் சிறிய லிங்கங்களால் லிங்கம் சூழப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் சுமார் ஒரு கோடி அல்லது பத்து மில்லியன் லிங்கங்கள் உள்ளன.
கோயிலில் பற்றிய மேலதிக தகவல்
1. நேரம்: காலை 6:00 - இரவு 9:00
2. நுழைவுக்கட்டணம்: ஒரு நபருக்கு ரூ.20
3. பார்க்கிங் கட்டணம்: ரூ 30