கொரியப் பெண்கள் எப்போதும் அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக கொரியப் பெண்களை பார்க்கும் போது எல்லாருக்கும் ஒருவித பொறாமை காணப்படும். அதற்கு காரணம் அவர்களின் சரும அழகு தான்.
வயதானால் கூட சரும அழகை பராமரிப்பதில் கொரியப் பெண்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. பார்ப்பதற்கு அவர்களது முகம், சருமம் கண்ணாடி போல் பளபளக்கும். இது எளிதில் யாரையும் கவர்ந்து விடும்.
இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சரும அழகை மேம்படுத்த இயற்கை முறை டிப்ஸ்களை பின்பற்றுவது தான்.
ஒவ்வொரு கொரிய பெண்ணும் சரும அழகுக்கென்றே நிறைய அழகு பராமரிப்புகளையும் பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
கொரிய பெண்கள் தினமும் முகத்தை ஃபார்ம் க்ளீன்சர் கொண்டு கழுவுகின்றனர். இது முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், வியர்வை போன்றவற்றை போக்க பயன்படுகிறது. இதை அவர்கள் தினசரி தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
மேலும் தங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்பை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சருமத்தை புதுப்பிக்க முடியும். இதனால் உங்க சருமம் பட்டு போன்ற தன்மையை அடையும் என்கிறார்கள்.
கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகின்றனர். பிறகு வெளியில் செல்வதற்கு முன்பு சன் ஸ்க்ரீனை அப்ளை செய்து கொள்கின்றனர்.
கொரியப் பெண்களின் அழகு பராமரிப்பில் டோனர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சருமத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அவர்கள் சரும pH அளவை சமப்படுத்த டோனரை பயன்படுத்துகிறார்கள்.
கொரியப் பெண்கள் தங்கள் முகத்திற்கு பேஸ் மற்றும் எண்ணெய் சார்ந்த சீரம் வகைகளை பயன்படுத்துவது உண்டு. இந்த சீரம் வகைகளை அவர்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டே தயாரிக்கின்றனர்.