நீரிழிவு நோயாளிகளும் கேட்டு வாங்கி சாப்பிடும் கேழ்வரகு கூழ்...எப்படி செய்வது தெரியுமா?
கம்பு, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இவை இரண்டையும் வைத்து சத்தான கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
விஜய் மகனுக்கு ஜோடியாக ஆசைப்படும் ஜில்லா பட நடிகை....யார் அவர் தெரியுமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவாக இந்த கூழ் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு – ஒரு கப்
- கம்பு மாவு – அரை கப்
- அரிசி நொய் – அரை கப்
- நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
- கடைந்த தயிர் – அரை கப்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் விட்டு முதல் நாளே கரைத்து புளிக்கவிடவும்.
மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் விட்டு உடனடியாக கரைத்துக்கொள்ளவும்.
இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை!
அரை கப் அரிசி நொய்யில் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் புளிக்க வைத்த கேழ்வரகு மாவு, கரைத்த கம்பு மாவு, உப்பு சேர்த்து கட்டித் தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும்.
வெந்ததும் இறக்கி, கடைந்த தயிர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.
உடலுக்கு குளிர்ச்சியான கம்பு - கேழ்வரகு கூழ் ரெடி.கம்பு - கேழ்வரகு கூழ்