கோப படாத நா கல்யாணம் பண்ணிக்கிறே.. கூமாபட்டி தங்கபாண்டிக்கு சீரியல் நடிகை கொடுத்த பதில்
“கோப படாத நா கல்யாணம் பண்ணிக்கிறே..” என பேட்டியொன்றில் சீரியல் நடிகை சாந்தினியை பார்த்து கூமாபட்டி தங்கபாண்டி பேசிய மற்றுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கூமாபட்டி தங்கபாண்டி
சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் சின்னத்திரைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
அந்த வரிசையில் சமூக வலைத்தளங்களில் கூமாபட்டியை பற்றி பேசி பிரபலமானவர் தான் தங்கபாண்டி.
இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க என்ற நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவருக்கு நிகழ்ச்சியில் ஜோடியாக சீரியல் நடிகை சாந்தினி இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த நிகழ்ச்சியில் ஆடிய நடனம் மற்றும் அவர்களின் நடிப்பு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்து வரும் வாரங்களில் என்னென்ன விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக அமையப்போகிறது என பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
நா கல்யாணம் பண்ணிக்கிறே..
இந்த நிலையில், கூமாபட்டி தங்கபாண்டி- சீரியல் நடிகை சாந்தினி இருவரும் இணைந்து சினிஉலகம் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.
அப்போது சீரியல் நடிகையை பார்த்து, “நீங்கள் ஒன்றும் யோசிக்காதீங்க. நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறே. நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கீங்க. அதுனால நா உங்கள நல்ல பார்த்துப்பே..” என பேசுகிறார்.
அதற்கு சாந்தினியும் பெரிதாக எதுவும் பேசாமல் சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது போன்று பல விடயங்களை இந்த பேட்டியில் இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலதிக விடயங்களை காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |