உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும்
பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதிகரித்த வேலைப்பளு, துரித உணவுகளின் துகர்வு அதிகரித்தமை, ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைப்பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும் கூட விரைவில் உடல் எடையை குறைக்க கொங்குநாட்டு கொள்ளு துவையலை வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொண்டாலே போதும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் கொங்குநாட்டு கொள்ளு துவையல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முளைக்கட்டிய கொள்ளுப்பருப்பு/கொள்ளுப்பருப்பு - 250 கிராம்
தண்ணீர் - தேவையானஅளவு
தாளிப்பதற்கு தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மல்லி - 1தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 15-20
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் முளைக்கட்டிய கொள்ளு பருப்பை தண்ணீரில் கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.( சாதாரண கொள்ளும் பயன்படுத்தலாம்)
அதனையடுத்து குக்கரில் கொள்ளு சேர்த்து அது மூழ்கும் அளவில் தண்ணீரட ஊற்றி 5 விசில் வரையில் நன்றாக வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
விசில் போனதும் சற்று ஆறவிட்டு, நீரை வடிகட்டி கொள்ளை தனியான எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி மற்றும் சீரகத்தை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைசேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கி, அதில் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வேக வைத்த கொள்ளு பருப்பையும் அதில் சேர்த்து 1 நிமிடம் நன்றாக கிளறிவிட்டு ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் வதக்கியபொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பான பதப்பில் அரைத்து எடுத்தால், அவ்வளவு தான் சுவையான கொங்குநாட்டு கொள்ளுப் பருப்பு துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |