கொங்குநாடு ஸ்பெஷல்: ஊளைச் சதையை குறைக்கும் கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
பொதுவாக கொள்ளு பருப்பை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறன.
இந்த தண்ணீரில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. அத்துடன் சளி, ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளால் அவஸ்தைப்படுபவர்கள் இந்த தண்ணீர் குடித்து வந்தால் குணமாகும்.
மேலும் எடையை கணிசமாக குறைக்க நினைப்பவர்கள் கொள்ளு குழம்பு செய்து சாப்பிடலாம். இதிலிருக்கும் ஊட்டசத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
அந்த வகையில், கொங்குநாடு ஸ்பெஷலில் முளைகட்டிய கொள்ளு குழம்பு எப்படி செய்வது என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முளைக்கட்டிய கொள்ளு - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 2
- தக்காளி - 3
- வரமிளகாய் - 5
- மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்
- சீரகம் - சிறிதளவு
- தேங்காய் துருவல் - சிறிதளவு
கொள்ளு குழம்பு வைப்பது எப்படி?
கொள்ளினை 10 மணிநேரம் ஊற வைத்து அதனை நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கார்ட்டன் துணியால் இரவு முழுவதும் கொள்ளை கட்டி வைக்கவும்.
காலையில் எடுத்து பார்க்கும் பொழுது கொள்ளு முளைக்கட்டி இருக்கும். இதனை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக வேக வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம், பூண்டு, சீரகம், வர மிளகாய், தேங்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் வேக வைத்த கொள்ளு சேர்த்து கிளறவும்.
வதங்கியதும் அடுப்பை அனைத்து விட்டு கலவையை ஆற விடவும். பின் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
இந்த மசாலா தான் கொள்ளு குழம்பிற்கு சுவை தரும். வேக வைத்திருக்கும் கொள்ளுவுடன் மசாலாவை கலந்து விடவும். சரியாக ஒரு கொதி வந்தவுடன் கடுகு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனை குழம்பில் ஊற்றி இறக்கினால் சுவையான கொள்ளு குழம்பு தயார்!