பூனைக்குட்டியை தூக்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... தலைத் தெறிக்க பதறியடித்து ஓட்டம் பிடித்த நபர்!
பூனைக்குட்டி என்று புலி குட்டியை தூக்கிய நபர் ஒருவர் அதை பார்த்து பதறி அடித்து தலைத் தெறிக்க ஓடும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தெலங்கானா மாநிலம் ஓய்.எஸ்.ஆர் கட்சியின் செய்தி தொடர்பாளரான கொண்டா ராகவ ரெட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நஷ்கலப்பள்ளி கிராமம் அருகே காரில் சென்றுள்ளார்.
அப்போது சாலையில் பூனை ஒன்று தலையில் சொம்பு மாட்டிக் கொண்டதால் அவதிப்பட்டுக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த ராகவ ரெட்டி பூனைக்கு உதவலாம் என நினைத்து காரை நிறுத்தினார்.
Almost catfished?! ??
— Mohammad fasahathullah siddiqui (@MdFasahathullah) October 14, 2021
A unique experience for #YSRTelangana spokesperson Konda Raghava Reddy. He tried to rescue what looked like a cat that was stuck in a pot,only to realize moments later that it was a leopard.This poor little cub must be only weeks old and can’t be dangerous pic.twitter.com/6TIR2M5HBl
பிறகு காரில் இருந்து இறங்கி பூனையைத் தூக்கினார்.
அப்போதுதான் தாம் தூக்கியது பூனைக்குட்டி அல்ல புலிக்குட்டி எனத் தெரிந்து உடனே கீழே போட்டுவிட்டு அவர் கார் அருகே பதறி ஓடியுள்ளார்.