ஈழத்தின் பெருமைக்காக்கும் கொம்புச்சந்தி அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
தமிழர்களின் பெருமைக்காக்கும் அம்சங்களில் கோயில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
தமிழர்கள் வாழும் பகுதியில் எது இல்லாவிட்டாலும் நிச்சயம் ஊருக்கு ஒரு கோயில் இருக்கும்.
அந்த வகையில் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் தமிழர் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த கொம்புச்சந்தி அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் அமைந்திருக்கிறது.
இந்த கோயில் கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இலங்கை மக்களின் கலைப்படைப்பை பார்க்க நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று பிள்ளையாரின் அருளை பெற்று விட்டு வரலாம்.
திருக்கோயிலின் சிறப்பு
சித்திரா பௌர்ணமி தினத்தில் தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்தி பிள்ளையார் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கலந்து கொள்வார்கள். ஏனெனின் இந்த கோயில் சித்தர்களினால் வழிபாடு செய்யப்படும் நீண்ட வரலாறு கொண்ட கோயிலாக மக்கள் மத்தியில் ஒரு கதை உள்ளது.
கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களிலிருந்து மக்கள் வந்து திருவிழாவை கண்டுகழித்து செல்வார்கள்.
சுமாராக 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் மாலை விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப அலங்காரபூஜை, சுவாமி உள்வீதி வெளி வீதி வருதல் ஆகியவை நடைபெறும்.
இதனை தொடர்ந்து மாம்பழத்திருவிழா, வேட்டைத்திருவிழா நடைபெற்று மாலை வேளைகளில் சப்பரத்திருவிழாவும் நடைபெறும்.
இப்படி தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தின் சிறப்புக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.