உடல் எடையைக் குறைக்கும் ரசம்... இப்படியொருமுறை செய்து பாருங்க
உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள்.
ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடையை குறைக்க அதிகம் போராடுபவர்கள் ஒரு முறை கொள்ளு ரசம் வைத்து குடித்தால் விரைவில் எடை குறையும். இந்தக் கொள்ளு ரசத்தை எப்படி செய்வதென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு – 50 கிராம்
- புளி – சிறிய அளவு
- தக்காளி – 1 (பெரியது)
- மல்லி இலை – ஒரு கொத்து
- கறிவேப்பிலை – 2 கீற்று
- வெள்ளைப் பூண்டு – 8 பல்
- மிளகாய் வத்தல்
- மிளகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1/2 ஸ்பூன்
- பெருங்காயப் பொடி – சிறிதளவு
- உப்பு – தேவைக்கு
- நல்ல எண்ணெய் – 1/2 கரண்டி
- வெந்தயம் – 1/4 கரண்டி
- கடுகு – 1/4 கரண்டி
செய்முறை
கொள்ளை கல் நீக்கி சுத்தம் செய்து அலசி முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
மறுநாள் களைந்து குக்கரில் வேக வைத்து ஆறியதும் கொள்ளை மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
பின்னர் மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தெடுக்கவும்.
பிறகு பாத்திரத்தில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயப் பொடி, கரைத்த புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த கொள்ளு, அரைத்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி விட்டு மல்லி தலையை மேலாக தூவி இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |