அமாவாசை தினத்தில் ஏன் கோலம் போடக் கூடாது? இனி மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீர்கள்
கிராமப்புறங்களில் தினமும் காலையில் சாணம் தெளித்து கோலம் போடுவதைப் பார்த்திருப்போம்.
ஆனால் தற்போது நவீன வளர்ச்சி என்ற பெயரில் பலரின் வீட்டில் கோலம் போடுவது கிடையாது.
காலையில் எழுந்ததும் சாணியை எடுத்து தண்ணீரில் கரைத்து வீட்டின் முன் சாணம் தெளிப்பதால், நம் விரல்களின் வழியாக பிரபஞ்ச சக்தி கிடைக்கும்.
தரித்திரம் நீங்கும், கிருமி நாசினியாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வாஸ்துப்படி இந்த 3 மாற்றங்களை செய்தால் போதும்! சகல செல்வங்களும் தேடி வருமாம்

வீட்டுக்கு வரும் மகாலட்சுமி
மகாலட்சுமியே வீட்டிற்கு வருவதால் சின்ன சின்ன பூச்சிகளால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், நோய்கள் தீரும்.
இதனால் மருத்துவ செலவுகள் குறையும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
நவ கிரகங்களுக்கும் தனித்தனி கோலங்கள் உள்ளன.
அதனால் தான் நாம் வீட்டில் ஒரே மாதிரியாக கோலம் போடாமல் வெவ்வேறு வடிவில் போட்டுக் கொண்டிருக்கின்றோம்.
கோலத்தைப் பார்த்த உடன் தெய்வங்கள், அதிர்ஷ்ட தேவதைகள் உள்ளே வருவார்கள்.
பேருந்தில் அத்துமீறிய நபர்! Safety Pin மூலம் பாடம் புகட்டிய பெண்
அமாவாசை தினத்தில் ஏன் கோலம் போடக் கூடாது?
கோலத்தைப் பார்த்து தெய்வங்கள், தேவதைகள் வருவார்கள்.
வீட்டில் கோலம் போட்டிருந்தால் ஆன்மாவாக இருக்கும் நம் முன்னோர்கள் வீட்டில் வர முடியாது.
நாம் அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடும் போது அவர்கள் வீட்டில் வர முடியாத வண்ணம் கோலம் தடுக்கும் என்பதால் தான் அமாவாசை தினத்தில் கோலம் போடக் கூடாதாம்.