கண்டுக்காமல் சென்ற ஜோ ரூட்; கோஹ்லி செய்தது என்ன தெரியுமா?
இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லி செய்த செயலை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஓவல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் கோஹ்லி செய்த செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதாவது, ஆட்டத்திற்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என இருவரும் தனித்தனியே பெவிலியன் நோக்கி திரும்பியுள்ளனர்.
ஜோ ரூட் முன்னதாகவும், விராட் கோஹ்லி பின்னதாகவும் சென்றுள்ளார். அப்போது அவர்கள் கடந்து சென்ற பாதையில் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று யாரோ தூக்கி வீசியதில் கீழே விழுந்து கிடந்துள்ளது.
அதை ஜோ ரூட் கண்டும் காணாமல் கடந்து செல்ல, கோஹ்லி கீழே விழுந்திருந்த அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
அந்த காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அதோடு அது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
