உங்கள இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு... ஆர்சிபி-யின் தோல்விக்கு பின் வைரலாகும் விராட் கோலி சோக புகைப்படம்
ஐபிஎல் தொடரின் 31 லீக் போட்டி அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே எல்பிடபுள்யூ ஆகி விராட் கோலி (5 ரன்கள்) வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கலும் 22 ரன்களில் அவுட்டாகினார். அதன் பின்னர், அனைத்து விக்கெட்டுகளும் மல மலவென சரிய பெங்களூர் அணி 19 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியை, பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக, கேப்டன் கோலி 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த போட்டியின் போது, அணியின் ஒவ்வொரு வீரர்களும் அவுட்டானதை டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து விராட் கோலி சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. உற்சாகமாக இருக்கும் அவரை இதுபோல் பார்க்க வருத்தமாக உள்ளதாகவும், இந்த கஷ்டமான காலம் சீக்கிரம் மாறும் என்றும் கோலிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Don't worry virat well in next match .
— Gaurav rajpurohit (@Gauravrazz1220) September 20, 2021
I am always fan's of u. ❤#Kohli #ViratKohli pic.twitter.com/bMd3g4qqfN