உலகின் இந்த நாடுகளில் இரவில் சூரியன் மறையாதாம்: எந்த நாடு தெரியுமா?
பொதுவாக நாடுகள் எல்லாவற்றிலும் பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என இருந்து வருகின்றது. கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைவது வழக்கமான விஷயம்.
ஆனால் சில நாடுகளில் இரவில் சூரியன் மறையாது எனும் தகவல் வெளியாகி உள்ளது. அது எந்தெந்த நாடுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரியன் மறையாத நாடு
நோர்வே நாட்டில் மே மாதம் இறுதித் திகதியில் இருந்து ஜீலை வரை சூரியன் சுமார் 76 நாட்கள் மறைவதில்லை.
இதனால் தான் இந்த நாடு நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று பெயர் பெற்றுள்ளது. நுனாவுட் மற்றும் கனடா இந்த நாடுகளில் சுமார் இரண்டு மாதங்களுக்கு சூரிய ஒளி அப்படியே இருக்குமாம்.
தொடர்ந்து 24 மணிநேரமும் சூரியன் பிரகாசத்திலேயே காணப்படுகின்றது. குளிர் காலத்தில் 30 நாட்களுக்கு தொடர்ந்து இருட்டாகவே காணப்படுகிறது.
ஐஸ்லாந்து கோடையில் ஐஸ்லாந்து இருட்டாக இருக்கும், ஜூன் மாதத்தில் சூரியன் மறையாததால் வெளிச்சமாகவே இருக்கும்.
பாரோ, அலாஸ்கா மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் இங்கு மறைவதில்லை. நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு இங்கு மீண்டும் சூரியன் உதிக்காது.
ஸ்வீடனில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதிக்கும். இங்கு தொடர்ந்து 6 மாதங்கள் சூரியன் மறையாமல் பகல் மட்டுமே இருக்கும்.