பாக்யராஜிற்கு தங்கையாக நடித்த இந்த சிறுமி யார் தெரியுமா? இப்போ பிரபல நடிகை
பாக்யராஜ் 1979 ஆம் ஆண்டு வெளியான சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இவர் 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.
அதன்பின், தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவராக திகழ்ந்து வந்தார்.
இயக்குநராக பல வெற்றி படங்களை உருவாக்கிய பாக்கியராஜ் நடிப்பிலும் பல ரசிகர்களின் மனதை வென்று முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.
1984-ல் பாக்யராஜ் "தாவணி கனவுகள்" என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.அந்த படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார்.
அந்த படத்தில் பாக்யராஜின் குட்டி தங்கை கதாபாத்திரத்தில் ஒரு சிறுமி நடித்திருப்பார்.
அந்த சிறுமி வேறு யாரும் இல்லை, பிரபல தொகுப்பாளினி, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் பிரியதர்ஷினி தான் அவர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |