அதிகமாக நெய் சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து வரும் ஜாக்கிரதை
பசுவின் பாலில் இருந்து தான் நெய் என்பது தயாரிக்கப்படுகிறது. இந்த நெய்யில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன.வயது முதிர்ச்சி ஆவதை தடுக்கும் சக்தி நெய்க்கு உள்ளது.
உங்களது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நாக்கில் சுவையை அதிகமாக தருவதால் இதை அதிகம் சாப்பிட கூடாது.
நெய் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. இந்த நெய்யை அதிகமாக சாப்பிட்டால் உடலில் என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நெய்
நெய் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டால் அது அஜீரண கோளாறை வரவைக்கும். அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் இது சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
நீண்ட கால செரிமாண கோளாறு, வயிறு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதிகமாக நெய் சாப்பிடக்கூடாது. உடலின் உள்ளே சூட்டை இது அதிகரிப்பதால் இருமலுடன் கூடிய காய்ச்சல் இருக்கும்போது நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அஜீரண பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் அவர்கள் நெய் சாப்பிடும் அளவை குறைக்க வேண்டும்.
கல்லீரல் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னை அல்லது நோய் பாதிப்பு இருப்பவர்கள் சாப்பாட்டில் நெய் எடுத்துக்கொள்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |