திடீரென மருத்துவனையில் அனுமதியான கே.எல். ராகுல்- சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
கடைசியாக நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து, இன்று நடைப்பெற்ற ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், கே.எல். ராகுல் உடல் நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக ஏற்பட்டது.
இதனிடையே, மருத்துவ பரிசோதனையில், ராகுலுக்கு, குடலில் ஏற்பட்ட அப்பெண்டிசைட்டிஸ் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர். .
இதனால் பஞ்சாப் அணி பரிதவிப்பில் உள்ளது. அவர் அறுவை சிகிச்சை முடிந்தும் உடனே எல்லாம் அணிக்காக ஆட முடியாது என தெரிகிறது. இதனால் ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றத்திலேயே உள்ளனர்.