ஆர்சிபி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட இரண்டு வீரர்கள்! பலப்பரீட்சையில் வெளியேறும் அணி எது?
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று ஷார்ஜாவில் நடைபெறுகிறது. வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சந்திக்கின்றன.
இதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் மோதும்.
இந்த நிலையில், பெங்களூரு அணியில் இருந்து, இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா மற்றும் துஸ்மந்தா சமீரா ஆகிய இருவரும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த இருவரும் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளனர். இலங்கை அணி நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாமல், குட்டி அணிகளுடன் இணைந்து தகுதி சுற்றிலிருந்து விளையாடவுள்ளது.
இதனால், இந்த பயிற்சி ஆட்டத்தின்போது ஹசரங்கா, சமீரா ஆகியோர் அணியில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்ததால்தான், இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஆர்சிபி விளக்கமளித்துள்ளது.
மேலும், இன்று நடக்கும் போட்டியில், இவ்விரு அணிகளும் லீக்கில் சந்தித்த 2 ஆட்டங்களில் ஒன்றில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர், மற்றொன்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. எப்படி இந்த போட்டியில் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.