சமையறையில் செய்யக்கூடாத தவறுகள்! பின்விளைவு பயங்கரமா இருக்குமாம்
சமையலறையில் பெண்கள் வேலை செய்யும் அலட்சியமாக இருந்தால் அது ஆபத்தில் கொண்டு போய் முடியும்.
தற்போது சமையலறையில் பயங்கர பிஸியாக இருக்கும் பெண்களுக்கு சில டிப்ஸினை இங்கு காணலாம்.
சமையலறையில் குழந்தைகள் வேண்டாம்
ஃபிரிட்ஜை சமையலறைக்குள் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. கோடைக் காலங்களில் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, சிலிண்டர் கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் பெரும் பாதிப்பாக உருவாகலாம்.
சமையலறையில் கூர்மையான பல கருவிகள் உள்ள நிலையில் குழந்தைகள் அவற்றால் காயம் அடையும் வாய்ப்புகள் அதிகம். எனவே குழந்தைகளைச் சமையலறைக்குள் அனுமதிக்காதீர்கள்.
சமையலறையில் நீண்ட கைகள் கொண்ட தொளதொளப்பான ஆடைகள் அணிய வேண்டாம். அவ்வகை துணிகளில் எளிதில் நெருப்பு பற்றும் வாய்ப்பு கொண்டவை. மேலும் சிந்தெடிக் வகை ஆடைகளும் பாதுகாப்பானதாக இருக்காது.

சூடான பாத்திரங்களை தூக்கும் போது உஷார்
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமையலறையில் உள்ள மின்சார இணைப்புகளைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.
அடுப்பில் எதையாவது கிளறும்போது, நீங்கள் நிற்கும் திசையை நோக்கி கிளறாதீர்கள். நீங்கள் நிற்பதற்கு எதிர்திசையிலோ, பக்கவாட்டிலோ கிளறுங்கள். இது திடீரென்று ஏற்படும் தீக்காயங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும்.
அடுப்பிலிருந்து சூடான பாத்திரங்களைத் தூக்கும் போது உங்களால் எவ்வளவு எடையை சுலபமாக தூக்கமுடியும் என்பதை ஒருமுறை யோசித்து அதற்குப் பின்பு தேவையான உபகரணங்களை வைத்துத் தூக்கி இறக்குங்கள்.
