சமையலறையில் பாத்திரம் கழுவ பஞ்சு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த நோய்கள் வரலாம்
எல்லோரது வீட்டிலும் சமையலறையில் முக்கியமாக பயன்படுத்தும் ஒரு பொருள் என்றல் அதில் ஸ்பாஞ்ச் முக்கியத்துவம் பெறுகின்றது.
சுகாதாரத்தை பராமரிக்க கிட்சன் ஸ்பாஞ்ச், துணிகள், ரப்பர் கையுறைகள் மற்றும் டஸ்டர்கள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக பாத்திரங்களைக் கழுவும் ஸ்பாஞ்சுகள் தொற்றுநோய்களை உருவாக்கும் என அறிவியல் மூலம் தெரியவந்துள்ளது.
இது சுத்தம் செய்யும் பொருட்களாக இருந்தாலும் இதில் உயிரை கொல்லக்குடிய பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். இது எப்படி சாத்தியம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சமயலறை பஞ்சு
இந்த பஞ்சில் இருக்கும் கிருமிகள் கழிவறையை விட அதிகமான கிருமிகள் இருக்கின்றன. இதில் ஒரு கன சென்டிமீட்டருக்கு 54 பில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன, இது உணவு விஷத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த பாக்டீரியாக்களுக்கு கட்டமைப்பு நுண்ணுயிர் வளர்ச்சிக்கு சிறந்த இடமாக இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.இந்த பாக்டீரியாக்களினால் மூளைக்காய்ச்சல், நிமோனியா, இரத்தத்துடன் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் வரும்.
இதில் காணப்படும் கிருமி வகைகள் அமெரிக்கன் பார்மசி, சுசி மற்றும் கோஹன் உள்ளிட்ட வெப்சைட்டின் படி, பல வகையான பாக்டீரியாக்கள் ஸ்பாஞ்ச்சுகளில் இனப்பெருக்கம் செய்யும்.
இதில் கேம்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா வயிற்றுப்போக்கு, இரைப்பை குடல் வலி, காய்ச்சல் மற்றும் குமட்டலை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவாகும். இது கோழி இறைச்சிகளில் காணப்படக்கூடியது.
என்டோரோபாக்டர் குளோகே எனும் கிருமி குடல், தோல், சுவாச பாதை, உள் உறுப்புகளை தாக்கும் பாக்டீரியா தொடராகும். சில நேரங்களில் இந்த கிருமிகள் மிகவும் ஆபத்தான நிமோனியா, இரத்தத்தில் விஷம், கடுமையான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் மூளைக்காய்ச்சல் வரவும் காரணமாக இருக்கும்.
ஈகோலி எனப்படும் பாக்டீரியா பஞ்சில் இருக்கும். இது உணவு நச்சுத்தன்மையாக்கும். இதன் காரணமாக வயிற்று வலி, வயிற்றுப்போக்கு இதை கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் இது சிறுநீரக செயலிழப்பு, இரத்ததுடன் கூடிய மலம் மற்றும் ஆபத்தான த்ரோம்போசைட்டோபீனியா போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே பாத்திரங்களை சுத்தம் செய்ய ஸ்க்ரப் பிரஷ்கள், சிலிகான் பிரஷ்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மெட்டல் ஸ்க்ரப்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |