சிங்க் பக்கத்தில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்... கிருமி தாறுமாறாக அதிகரிக்கும்
கிச்சன் சிங்க் அருகே ஈரப்பதம் இருப்பதால், சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மின்சாதனங்கள், மரப்பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை சிங்க் அருகே வைப்பதால், அவை சேதமடைவதுடன், கிருமித்தொற்று மற்றும் விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.
சிங்க் அருகே வைக்கக் கூடாத பொருட்கள்
சிங்க் அருகே ஈரப்பதம் இருப்பதால், கார்ட்போர்டு பெட்டிகளில் உள்ள கிளீனர்களை வைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டமான, ஈரப்பதம் இல்லாத இடத்தில் கிளீனர்களை வைப்பதே சரி. இல்லையெனில் அவை வீணாகிவிடும்.

சிங்க் அருகே பாத்திரங்களை வைத்தால், ஈரப்பதம் தங்கி கிருமிகள், துர்நாற்றம் ஏற்படும். பூஞ்சை, கிருமித்தொற்றுக்கு இது வழிவகுக்கும். பாத்திரங்களை பாதுகாப்பான தூரத்தில் வைக்கவும்.
சிங்க் அருகே உணவுப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்கவும். ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமின்மையால் காய்கறிகள், பழங்கள், பேக்கரி பொருட்கள் விரைவில் கெட்டு, பூஞ்சை பாதிப்பு ஏற்படும்.

சிங்க் அருகே மின்சாதனங்களை வைப்பது ஆபத்தை விளைவிக்கும். ஈரப்பதம் காரணமாக மிக்சி, ஓவன் போன்ற சாதனங்கள் பழுதடைந்து, பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
மரப்பொருட்களை சிங்க் அருகே வைக்க வேண்டாம். அவை ஈரப்பதத்தை உறிஞ்சி, விரைவில் சேதமடைந்து பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகும். கட்டிங் போர்டு, மரக்கரண்டிகளில் கவனம் தேவை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |