பூண்டு உரிக்க அதிகமாக சிரமப்படுகிறீர்களா? ஈஸியான 3 ட்ரிக் இதோ
இன்று சமையலுக்கு ஆகும் நேரத்தினைக் காட்டிலும், சமையலுக்கு தேவையான தயாரிப்பு நேரம் தான் அதிகமாக உள்ளது.
அதிலும் பூண்டு, வெங்காயம் உரிப்பதற்க இல்லத்தரசிகள் அதிகமாகவே சிரமத்தினை எதிர்கொள்கின்றனர். சமையல் வல்லுநர் சரண்ஷ் கோயிலா பூண்டு உரிப்பதற்காக சில டிப்ஸினை இன்ஷ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
டிப்ஸ் 1
ஒரு முழு பூண்டை 20 விநாடிகளுக்கு மைக்ரோவேவ்வில் வைக்கவும். பிறகு மேலிருந்து துண்டுகளாக நறுக்கினால், ஒரே நேரத்தில் நிறைய பூண்டுகளை உரிக்கலாம். அவையும் எளிதில் வெளியே வரும்.
இருப்பினும், இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், அவை கொஞ்சம் சமைக்கப்பட்டவையாக இருக்கும்.
எனவே அவற்றை உங்களால் சில உணவுகளுக்கு பயன்படுத்த முடியாது. ஆனாலும், அவற்றை பெரும்பாலான உணவுகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
டிப்ஸ் 2
இரண்டு கிண்ணங்களில் அல்லது மூடியுடன் கூடிய பெரிய ஜாடியில் பூண்டு சேர்த்து குலுக்கவும்.
இது பெரிய பூண்டு பற்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் இது சிறிய பூண்டு பற்களின் தோல்கள் அவ்வளவு எளிதில் உரிபடாது.
டிப்ஸ் 3
ஒரு முழு பூண்டின் மேல் கத்தியை அழுத்தவும். இது அவற்றை எளிதில் உடைக்கிறது. இந்த டிரிக் அனைத்து சமையல் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படும் உன்னதமான முறையாகும்.
இந்த எளிய செய்முறை பூண்டு பற்களை எளிதில் வெளியே கொண்டு வர முடியும். ஆனால், நீங்கள் நிறைய பூண்டு பற்களை உரிக்க வேண்டியிருந்தால், இந்த செய்முறை உங்களை சோர்வடைய செய்யும்.”என்று சமையல் வல்லுனர் தெரிவித்துள்ளார்.