பிரியாணியில் உப்பு, காரம் அதிகரித்துவிட்டதா? சமையலின் சுவை தாறுமாறாக இருக்க இதோ டிப்ஸ்
அன்றாடம் உணவு சமைக்கும் போது சில உணவுகளில் எந்தெந்த மாற்றங்கள் செய்தால் சுவை அதிகரிக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சின்ன சின்ன டிப்ஸ்
குழம்பு தயாரிக்கும் போது காரம் அல்லது உப்பு அதிகமாகிவிட்டால், சின்ன வெங்காயத்தை சிறிதளவு எடுத்து எண்ணெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் சரியாகும். தயிர் அல்லது தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைத்தால் காரம் குறையும்.
உருளைக்கிழங்கு அல்லது சௌசௌ காயை பெரிய துண்டுகளாக வெட்டி குழப்பில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் உப்பு, காரம் சரியாகிவிடும்.
சாதம் வடிக்கும் போது உப்பு அதிகமானால், எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை சிறிது சேர்த்தால் சரியாகும்.
பிரியாணியில் உப்பு அல்லது காரம் கூடினால், வெங்காயத்தை பொடிதாக நறுக்கி எண்ணெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பிரியாணியில் காரத்தை குறைப்பதற்கு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்க சேர்க்கலாம்.
அந்தக் காலத்திலேயே லேடி கெட்டப்பில் நடித்த நடிகர் திலகம்... அச்சு அசல் பெண் போலவே இருக்கும் அரிய புகைப்படம்
வெல்லப்பாகு, நாட்டுச்சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கலந்தாலும் காரம் குறையும்.
ரசம் வைக்கும் போது புளிப்பு சுவை அதிகரித்தால், சீரகம், பூண்டு, வெங்காயத்தை நன்கு தாளித்துவிட்டு, பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரை உள்ளே ஊற்றினால் சரியாகும்.
சட்னியில் காரம் அதிகரித்துவிட்டதால், கேரட் தக்காளி, பீட்ரூட், சவ்சவ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினை நன்றாக அரைத்து எண்ணெய்யில் வதக்கி சேர்க்கவும்.
தேங்காய் சட்னியில் உப்பு அல்லது காரம் அதிகரித்தால், பொட்டுக்கடலை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
பழச்சாறு தயார் செய்யும் போது பனிக்கட்டியின் அளவு அதிகரித்துவிட்டதால் சுவை குறைவாக இருக்கும். இதற்கு சிறிதளவு சிட்ரஸ் பழச்சாறு, சப்ஜா விதை, வெள்ளரி விதை, இளநீர் ஆகியவற்றை சேர்க்கவும்.
இதுவே அசைவ சமையலில், இறைச்சி அதிகமாக வெந்துவிட்டால், ஆலிவ் எண்ணெய், இனிப்பு மற்றும் காரம் கலந்த சாஸ் கலந்து கிளறினால் சரியாகும். மிதமான சூட்டில் வேக வைத்தால் இறைச்சி மென்மையாக இருக்கும். ஆனால் இறைச்சியை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்க்கவும்..
ஊத்தப்பம் மிருதுவாக இருக்கவும், ஒரே மாதிரியான அனைத்து இடத்திலும் வேகவும், ஆப்பம் ஊற்றிய உடனே மூடி போட்டு மூடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |